கும்பகோணம் மாநகராட்சியில் 275 பேர் போட்டி

கும்பகோணம் மாநகராட்சியில் 275 பேர் போட்டி
X
கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 275 பேர் போட்டியிடுகின்றனர்.

கும்பகோணம் மாநகராட்சியில், மொத்தமுள்ள 48 வார்டுகளில் 28-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 445 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் வேட்புமனு பரிசீலனையின் போது பல்வேறு காரணங்களால் 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நாள் என்பதால், 113 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

இதில் 48 வார்டுகளிலும் மொத்தம் 275 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்குரிய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்கள் ஆகியவற்றை நேற்று மாலை தேர்தல் அதிகாரிகள் அறிவித்து, அறிவிப்பு பலகையில் ஒட்டினர்.

பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 189 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 1 மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நேற்று 54 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். தற்போது 134 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், 172 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நேற்று 49 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து தற்போது 121 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!