கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக  செயலாளர் எம்.ஜி.எம். சுப்பிரமணியன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

கும்பகோணம் பொற்றாமரைக்குளம் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

கும்பகோணம் பொற்றாமரைக்குளம் பகுதியில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா தாராசுரம் பேருந்து நிலையத்தில், பகுதி அதிமுக செயலாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான வழக்கறிஞர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பகுதி நிர்வாகிகள் பொன்னையன், கௌரிசங்கர், சாரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஜி.எம். சுப்பிரமணியன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ராம்குமார், கண்ணபிரான், பகுதி செயலாளர்கள் சேகர், ராமநாதன், ராஜி, ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், செந்தில், திருவையாறு நீலகண்டன், மாநில நிர்வாகிகள் லெனின், பாண்டியன் கோவி. கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture