கும்பகோணத்தில் 110 லிட்டர் சாராயம் பறிமுதல்

கும்பகோணத்தில் 110 லிட்டர் சாராயம் பறிமுதல்
X
கும்பகோணம் அருகே அரசலாற்றுபகுதியில் புதுச்சேரி சாராயத்தை விற்று வந்த அம்புரோஸ் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்பகோணம் அருகே அரசலாற்று வழி நடப்பு பகுதியில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்று வந்த அம்புரோஸ் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா, சாராயம் போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை கும்பகோணம் அரசலாற்று வழி நடப்பு பகுதியில் தனது வீட்டில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்று வந்ததாகக் கூறி அம்புரோஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!