/* */

சுவாமிமலை மற்றும் தாராசுரத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

சுவாமிமலை மற்றும் தாராசுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

சுவாமிமலை மற்றும் தாராசுரத்தில் கருணாநிதி  பிறந்தநாள் விழா
X

தாராசுரம் வலையப்பேட்டை பைபாஸ் அம்மாபேட்டையில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்கு தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் அரசு கொறடா கோவி. செழியன் தலைமையில்  மரியாதை செய்த திமுகவினர்

சுவாமிமலையில் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சுவாமிமலையில் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு பேரூர் கழக செயலாளர் எஸ்எம்எஸ். பாலசுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி மன்றத் தலைவர் வைஜயந்தி சிவகுமார், திமுக நிர்வாகிகள் நெடுஞ்செழியன், வக்கீல் விஜயகுமார், இக்பால், சுப்பிரமணியன், டிஜிஎஸ். கோபால், மனோகரன், தேவஸ்ரீகண்ட ஸ்தபதி, கோபால், பேரூராட்சி கவுன்சிலர்கள் லட்சுமிபிரியா கோபால், குணசேகரன், ராதிகா, ஜெய்சங்கர் மற்றும் பாஸ்கர், குணசேகரன், ராமச்சந்திரன், ராஜா, நீலமேகம், சரவணன், ரவி, ஆட்டோ கணேசன், சம்பத், விஜயபாலன், பாலதண்டாயுதம் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

தாராசுரத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு தாராசுரம் வலையப்பேட்டை பைபாஸ் அம்மாபேட்டையில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்கு தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், அரசு கொறடா கோவி. செழியன் தலைமையில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எம்பி சண்முகம் ஆகியோர் முன்னிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் குடந்தை மாநகராட்சி மண்டல குழு தலைவரும் தெற்கு ஒன்றிய செயலாளருமான அசோக்குமார், குடந்தை மாநகர துணை மேயர் தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jun 2022 6:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு