கும்பகோணத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு: 15 பேர் கைது

கும்பகோணத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு: 15 பேர் கைது
X

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக் குழு நடத்திய போராட்டத்தில் எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்த 15 பேர் கைது

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீருக்கு கிடைத்து வந்த தண்ணீர் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கும்பகோணத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா உருவபொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு தலைவர் குடந்தை அரசன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு தலைமை செயற்குழு உறுப்பினர் விடுதலை சுடர், நகர செயலாளர் தீன் தமிழன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தளபதி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், காந்தி பூங்கா அருகில் உள்ள 4 ரோடு பகுதியில் திடீரென எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் நெருப்பின் மீது சாக்குப்பை போட்டு தீயை அணைத்தனர். அதனைத்தொடர்ந்து எடியூராப்பா படத்திற்கு தீ வைத்து எரித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!