திருபுவனம் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி

திருபுவனம் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
X

திருபுவனம் பேரூராட்சியில் பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருபுவனம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்குதல், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் கலந்துகொண்டு 20 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதவள்ளி, துணைத் தலைவர் ரவிசங்கர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் பங்கயற்செல்வி மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!