கும்பகோணம் அருகே ஜெகநாத பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார் பெருமாள்.
108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40ல் நடுநாயகமாகத் திகழ்வது கும்பகோணம் அருகே நந்திபுர விண்ணகரம் எனும் நாதன்கோயில் சேத்திரமாகும். இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது.
இந்த தலத்தில் உள்ள பெருமாளை திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார். மேலும் மகாலெட்சுமி பிரார்த்தனை செய்து எட்டு அஷ்டமி விரதம் இருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது இதனை முன்னிட்டு ஜெகநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu