கும்பகோணத்தில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

கும்பகோணத்தில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
X

சாக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

கும்பகோணத்தில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சுரேஷ்குமார், அமமுக கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் நடுபிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை கழக பேச்சாளர் ஆல்பா குமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் முத்துராஜ், 48வது வார்டு செயலாளர் லட்சுமி பாண்டியன், வட்ட இணைச்செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!