கும்பகோணம் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா

கும்பகோணம் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா
X

பட்டம் பெற்றவர்களுடன் விழாக்குழுவினர் உள்ளனர்.

கும்பகோணத்தில் சர்வதேச தமிழ் பல்கலை கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கும்பகோணம் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பாக பட்டமளிப்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் தமிழழகன் ஆகியோருக்கு அரசியல் மற்றும் சமூகப் பணிக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிறந்த மக்கள் பணிக்கான ஜெமோ இந்தியா விருது சோழபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முகம்மது சுகைலுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் இணை நிறுவனர் ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம், இயக்குனர் குடந்தை அஸ்ரப், சர்வதேச தமிழ் பல்கலைக் கழக சேர்மன் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தனர். சமூக சேவர்கள் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!