சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம்

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம்
X

சாக்கோட்டை வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

சாக்கோட்டை வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில், கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் (தொழுநோயாளிகள் காப்பகம்) சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

சுதந்திர போராட்ட தியாகியான சுப்பிரமணிய சிவா தேச விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்று தனது இறுதி நாட்களில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது நினைவு நாளை முன்னிட்டு சாக்கோட்டை தொழுநோயாளிகள் காப்பகமான வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி சுப்பிரமணிய சிவா உருவப்படத்திற்கு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள வயதானவர்கள் மற்றும் தொழுநோயாளிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்