கும்பகோணத்தில் தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்கவிழா
கும்பகோணத்தில் தாய்ப்பால் ஆலோசனை மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
கும்பகோணத்தில் சிசு மற்றும் குழந்தைகள் சத்துணவு கூட்டமைப்பு, இந்திய மருத்துவக் கழகம், இந்திய குழந்தைகள் நல சங்கம், கும்பகோணம் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம், மாநகராட்சி கார்னேசன் மருத்துவமனை, சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்க விழா கார்னேசன் மருத்துவமனையில் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிட்டி யூனியன் வங்கி அறக்கட்டளை பொறுப்பாளர் பாலசுப்ரமணியன், விழாக்குழு தலைவர் மருத்துவர் பழனிவேல், ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சாம்பசிவம், தமிழக அரசு மருத்துவப் பணிகள் இயக்குனர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி கலந்து கொண்டு பிரதி வாரம் வியாழன் தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் தாய்ப்பால் ஆலோசனை மையத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
அப்போது அவர்கள் பேசும்போது குழந்தைகளுக்கு பாலூட்ட தொடங்கியதும் பெண் தனது உடல்நலம், குடல் நிலை, செரிமான மண்டலம் போன்றவற்றை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் பற்றிய பிரச்சினைகள் குறித்து பிரதி வாரம் வியாழன் தோறும் நடைபெறும் ஆலோசனை மையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் ஆலோசனை பெறலாம் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், துணை மேயர் தமிழழகன், இந்திய மருத்துவக் கழகம் தலைவர் மருத்துவர் பரமசிவம், முன்னாள் மாநில தலைவர் மருத்துவர் கனகசபாபதி மற்றும் மருத்துவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், சுகாதார பள்ளி அலுவலர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu