தேவையின்றி சாலையில் சுற்றிய 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தேவையின்றி சாலையில் சுற்றிய 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
X
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேவயின்றி சாலையில் சுற்றிய 50 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதிலும் அரசு விதித்துள்ள ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் பலர் இருசக்கர வாகனத்தில் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணம் பேருந்துநிலையம் அருகில் இருந்த மேம்பாலத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடை உத்தரவை மீறியும், உரிய ஆவணங்கள் இன்றியும் வந்த 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் காரில் வந்த நபர்கள் உரிய அனுமதி பெற்று செல்கிறார்களா என்றும் ஆய்வு மேற்கொண்டார். கொளுத்தும் வெயிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகன தணிக்கையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!