கும்பகோணம் நகரத்திற்குள் உள்ள 44 குளங்களிலும் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: அனுமன் சேனா
கும்பகோணம் பொற்றாமரை குளம் தண்ணீரின்றி பரிதாபமாக காட்சியளிக்கிறது
கும்பகோணம்:
கும்பகோணம் நகரத்திற்குள் உள்ள 44 குளங்களிலும் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனுமன் சேனா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அனுமன் சேனாவின் மாநில செயலாளர் பாலா கும்பகோணம் ஆர்.டி.ஓ. சுகந்தியிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது::
கும்பகோணம் நகரத்திற்குள் 44 குளங்கள், 11 பாசன வாய்க்கால்களை துார்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதன் பிறகு பல குளங்கள் துார்வாரப்பட்டு ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் இதுவரை சந்திர புஷ்கரணி குளத்தில் துார்வாரும் பணிகள் தொடங்கவில்லை.
அனுமார் குளத்தில் தொடங்கப்பட்ட பணிகள் பாதியில் நிற்கிறது. ஆயிகுளத்திலும் பாதி பணிகள் தான் நடந்துள்ளது. இன்னும் தண்ணீர் நிரப்பவில்லை. பொற்றாமரை குளம் தண்ணீரின் வறண்டு காணப்படுகிறது. பிடாரி குளத்தில் உள்ள பழைய தண்ணீர் அசுத்தமாக காணப்படுகிறது. ரெட்டிராயர் குளத்திற்கு காவிரியில் இருந்து நீர்வழிப் பாதை உள்ளது. ஆனால், தண்ணீர் வரவில்லை. இக்குளத்தில் இருந்துதான் மற்ற குளங்களுக்கும் தண்ணீர் செல்ல வேண்டும்.
எனவே, கும்பகோணத்தில் உள்ள 44 குளங்களுக்கும் காவிரி, அரசலாற்று நீர் செல்லாமல் தடைபட்டுள்ளது. நகராட்சி, பொதுப்பணித் துறை, வருவாய் துறை இணைந்து உடனே நடவடிக்கை எடுத்து அனைத்து குளங்களிலும் நீர் நிரப்ப வேண்டும். எலுமிச்சங்காபாளையம், சாராய குளம் கிறிஸ்தவ மிஷினரியின் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu