ஏழை இளைஞர் ஐஏஎஸ் படிக்க ரூ. 30 ஆயிரம் உதவி தொகை வழங்கிய எம்.எல்.ஏ

ஏழை இளைஞர் ஐஏஎஸ் படிக்க ரூ. 30 ஆயிரம் உதவி தொகை வழங்கிய எம்.எல்.ஏ
X

இளைஞருக்கு பண உதவி செய்த எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன்  

ஐஏஎஸ் தேர்வுக்கு மேற்கொண்டு படிக்க முடியாமல் சுற்றி திரிந்த இளைனருக்கு ரூ.30 ஆயிரம் பண உதவி செய்த எம்.எல்.ஏ

கும்பகோணம் சகாஜி தெருவை சேர்ந்தவர் அருண் (29), இவரது தந்தை ரகுபதி சிறுமூளை பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாக உள்ளார். அதே போல் அவரது தாய் பார்வதியும் கண்பார்வையற்றவர். இந்த பெரும் சிரமத்திற்கிடையில் சமையல் கூலிவேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றியும், தனது படிப்பையும் தொடர்ந்து வருகிறார் அருண்.

எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் வாழ்க்கையை நடத்த முடியாத கடும் போராட்டத்திற்கிடையில் ஐஏஎஸ் படிப்பை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக போதிய வருமானம் இல்லாமல் இருந்தும் மிகவும் சிரமப்பட்டு, ஐஏஎஸ் தேர்வின் முதல்நிலை தேர்வான பிரிமினலரி தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள முக்கிய தேர்விற்கான பயிற்சியை முடிப்பதற்கு, போதுமான வசதியில்லாததால தன்னுடைய ஐஏஎஸ் கனவு கானல்நீராகிவிடும் என எண்ணி மனஉளைச்சலில் தவித்து வந்தார்.

பின்னர் தனது உறவினர்கள், நண்பர்களிடம் படிப்பை தொடர பண உதவி கேட்டு கிழிந்த உடையுடன், வாகன வசதி இல்லாததால் செருப்பில்லாத கால்களுடன் அலைந்து வருகிறார். இந்நிலையில் அழுக்கு வேட்டி, கசங்கிய சட்டையுடன், சவரம் செய்யாத தாடியுடன் கும்பகோணம் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு மனுவுடன் வந்தவரை அங்கிருந்தவர்கள் வித்தியாசமாக பார்த்தனர்.

பின்னர் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் அவரை உள்ளே அழைத்து பேசிய போது, தான் ஐஏஎஸ் படிப்பை தொடர பண உதவி செய்யுமாறும், முதல் நிலை தேர்விற்கான புத்தகங்களை வழங்கியதையும், தனது குடும்ப சூழ்நிலை குறித்தும் தெரிவித்தார். அருணின் இந்த வறுமை போராட்டைத்தையும் மீறி ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தை பாராட்டி, உடனடியாக தனது சொந்தபணம் ரூ.30 ஆயிரத்தை வழங்கி நன்றாக படித்து ஐஏஎஸ் தேர்வாகி, நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என வாழ்த்தினார்.

இதுகுறித்து அருண் கூறும்போது, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது என்னுடை கனவு, சாமானிய மக்களும் எளிதில் என்னை அனுகி அவர்கள் கோரிக்கையை தெரவிக்கும் அதிகாரியாகவும், அதனை உடனடியாக நிறைவேற்றும் அதிகாரியாகவும் இருக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!