கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மனித சங்கிலி போராட்டம்

கும்பகோணம் தனி மாவட்டமாக   அறிவிக்க கோரி மனித சங்கிலி போராட்டம்
X

கும்பகோணம் மாவட்டம் உருவாக்க கோரி நடந்த மனித சங்கிலிப் போராட்டம் .

Human Chain Agitation At Kumbakonam 1,000 நாட்கள் ஆன நிலையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காத முதல்வரை கண்டித்து நேற்று, கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக் குழுவினர் சார்பில், மகாமக குளத்தில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Human Chain Agitation At Kumbakonam

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க கோரி, 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.கடந்த, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முன்னிட்டு, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அமைப்போம்' என, வாக்குறுதி அளித்திருந்தார்.

இதுவரை 1,000 நாட்கள் ஆன நிலையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காத முதல்வரை கண்டித்து நேற்று, கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக் குழுவினர் சார்பில், மகாமக குளத்தில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இது குறித்து போராட்டக்குழுவினர் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நம்பி, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதுார் ஆகிய மூன்று தொகுதி வாக்காளர்கள், அவரது கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தோம்.ஆனால் தி.மு.க., வாக்குறுதி அளித்து ஆயிரம் நாட்கள் கடந்துள்ள நிலையில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காதது மூன்று தொகுதி மக்களுக்கும் ஏமாற்றம் அளிக்கிறது.வரும் பட்ஜெட் கூட்டத்தில் அல்லது 110 விதியின் கீழ் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags

Next Story
why is ai important to the future