கொரோனா: கும்பகோணத்தில் வாடிக்கையாளர்கள் இன்றி ஓட்டல்கள் வெறிச்சோடிக்கிடந்தன
கும்பகோணத்தில் வாடிக்கையாளர்களின்றி உள்ள உணவகம்
கொரோனா 3-வது அலை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அந்தந்த நாடுகள் இந்த நோயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தி அதிலிருந்து மீள மத்திய- மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.கொரோனா
இதைத்தொடர்ந்து தமிழக அரசும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் ஒரு பகுதியாக ஓட்டல்கள், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நோய்த்தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்களில் இடைவெளிவிட்டு இருக்கைகள் அமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து கும்பகோணத்தில் உள்ள ஓட்டல்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கைகளை மாற்றி அமைத்துள்ளது. இருப்பினும் பொதுமக்களிடம் நோய்த் தொற்று பரவும் அச்சம் அதிகரித்து ள்ளது. இதனால் கும்பகோணத்தில் உள்ள ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஓட்டல்கள் சங்க நிர்வாகி முருகானந்தம் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக நலிவடைந்த தொழில்களில் முக்கிய தொழில் ஓட்டல் தொழில் ஆகும். தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்கள் நடத்திய பலர் கடன் சுமையால் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இல்லாமல் வறுமையில் உள்ளனர். எனவே அரசு ஓட்டல் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு தேவையான உதவியை செய்ய வேண்டும் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu