இந்து மக்கள் கட்சி -அனுமன்சேனா சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

இந்து மக்கள் கட்சி -அனுமன்சேனா சார்பில்  விநாயகர் சிலை பிரதிஷ்டை
X

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி -அனுமன்சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை 

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும்விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கும்பகோணத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகரை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யவும், நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கும்பகோணம் கர்ண கொல்லை வடக்குத்தெருவில், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் நகர தலைவர் பிரபாகரன் இல்லத்தில், இன்றைய தினம் கொரோனாவை விரட்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 11-ஆம் தேதி இந்த விநாயகர் சிலைகள், தமிழக அரசின் உத்தரவுப்படி, நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதே போன்று நிர்வாகிகளில் இல்லங்களில் 24 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக, மாநில செயலாளர் பாலா கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ஆம் தேதி கொண்டாடுவதற்கு தயார் நிலையில் இந்து அமைப்புகளும் பொதுமக்களும் காத்திருக்கின்றனர். தமிழக அரசு அவரவர் இல்லங்களில் வைத்து வழிபடலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. எங்களுடைய இல்லங்களில் வைத்து வழிபடுவதற்கு, தமிழக அரசு ஏன் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேள்வியை நாங்கள் தொடர்ந்து முன்னெழுப்புகிறோம். அதன் தொடர்ச்சியாக, பொது இடங்களில் வைக்க அண்டை மாநிலங்களான, கர்நாடகாவில் புதுச்சேரி, தெலங்கானாவில் உள்ளிட்ட பகுதிகளில் பொது இடத்தில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கு விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற அன்பர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், நகர தலைவர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஆகியோர் கொரோனா வைரஸை விரட்டும் வகையில், சங்கல்பம் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்