ஹெலிகாப்டர் சகோதரர்கள் வெளிநாட்டில் முதலீடு: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை
துபாய் தொழில் அதிபர் தம்பதிகளான ஜபருல்லா- பைரோஜ்பானு.
கும்கோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரரிடம், ரூ 16 கோடி பணம் கொடுத்த கும்பகோணத்தை சேர்ந்த துபாய் தொழில் அதிபர் தம்பதிகளான ஜபருல்லா- பைரோஜ்பானு நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் துபாயில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகின்றோம். எங்களது மகன் மாற்றுத்திறனாளி. அவரது பேரில் நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என ஐந்தரை கோடி பணத்தை வைத்து இருந்தோம்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் எங்களிடம் தங்கம் மற்றும் பல பிசினஸ் செய்வதாக கூறினார். மேலும் எங்களிடம் முதலீடு செய்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்றனர். அதனை நம்பி நாங்கள் ரூ 16 கோடி பணத்தைக் கொடுத்தோம். நாங்கள் பணத்தை வங்கி மூலமாக கொடுத்ததால், அதற்கான அனைத்து ஆவணங்களும் முறையாக எங்களையும் உள்ளது.
தற்போது நாங்கள் பணத்தை திருப்பி கேட்டபோது மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா, ஆகியோரது போட்டோக்களை காட்டி எங்களை மிரட்டினார். மேலும், நாங்கள் சென்று பணத்தை கேட்கும்போது, நீங்கள் என்னிடம் பணத்தை திருப்பி வாங்கி விட்டால், ஒட்டு துணி இல்லாமல, கும்பகோணத்தை சுற்றி வருவேன் என கூறி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து பிரதமர் மோடிக்கு மின்னஞ்சலிலும், தமிழக முதல்வர் தலைமைச் செயலாளர், டிஜிபி, தஞ்சை எஸ்பி உள்ளிட்டோருக்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளோம். மேலும் கும்பகோணம் பகுதியில், எங்களை போல் பல பேரிடம் ரூ 600 கோடிக்கு மேல் பணத்தை ஏமாற்றி உள்ளது தெரியவந்துள்ளது. பணத்தை கொடுத்து அவர்களை மிரட்டியதால் புகார் கொடுக்காமல் உள்ளனர். அவர்களது, பணத்தையும் திரும்ப பெற்றுத்தர வேண்டும்.
ஹெலிகாப்டர் சகோதரர்கள் கும்பகோணத்தில் சுருட்டிய பணத்தை வெளிநாட்டில் பதுக்கி இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu