தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே 100 கிலோ குட்கா பறிமுதல்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே 100 கிலோ குட்கா பறிமுதல்
X
தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே 100 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியாவிற்கு, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம், தனிப்பிரிவு காவல்துறை மாரியப்பன் ஆகியோர் தலைமையில் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பாபுராஜபுரம் வீரா நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குட்கா இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது 100 கிலோவுக்கு மேல் குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. காவல்துறை சோதனையை கண்டவுடன் பதுக்கி வைத்திருந்த நபர்கள் தப்பி ஓடினர்.

Tags

Next Story