காரில் பதுக்கி வைத்த 75 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது

காரில் பதுக்கி வைத்த 75 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
X
கும்பகோணத்தில், காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 கிலோ குட்கா பறிமுதல் செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் பகுதியில் காரில் வைத்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் கும்பகோணம் மேலக்காவேரி, பாலக்கரை, தாராசுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் சக்கரபாணி கோவில் அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதைக்கண்ட போலீசார், காரை திறந்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது காரில் பிரபல சேமியா நிறுவன பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த காரை ஓட்டி வந்த சுந்தரபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த விநாயகம் (36) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை காரில் வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரில் 10 பைகளில் இருந்த 75 கிலோ குட்காவையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்து விநாயகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai and future cities