புனித அந்தோணியார் சர்ச்சில் பொன்விழா, ஆண்டு திருவிழா

புனித அந்தோணியார் சர்ச்சில் பொன்விழா, ஆண்டு திருவிழா
X

கும்பகோணம் நால்ரோடு புனித அந்தோணியார் சர்ச்சில் பொன்விழா மற்றும் ஆண்டு திருவிழா நடந்தது.

கும்பகோணம் நால்ரோடு புனித அந்தோணியார் சர்ச்சில் பொன்விழா மற்றும் ஆண்டு திருவிழா நடந்தது.

கும்பகோணம் அருகே நால்ரோடு புனித அந்தோணியார் சர்ச் பொன்விழா மற்றும் ஆண்டு திருவிழா நடந்தது. இதை ஒட்டி கடந்த 25ம் தேதி கொடியேற்றப்பட்டு திருப்பலி மற்றும் மறையுரையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 31-ஆம் தேதி வரை தினமும் ஜெபமாலை, நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்ச்சிகள் நடந்தது. விழானின் 8ம் நாள் காலை உதவி பங்குதந்தை மனோஜ் திருப்பலி மற்றும் மறையுரை வழங்கினார்.

குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி குருத்துவ அருட்பொழிவு விழா, பொன்விழா வாழ்த்தரங்கம், ஆலய அர்ச்சிப்பு மற்றும் நன்றி திருப்பலி நடத்தினார். பின்னர் ஆடம்பர தேர் ஊர்வலம் நடந்தது. இதில் பங்கு தந்தைகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக கொடியிறக்கினர். பூண்டி மாதா தியான மைய இயக்குனர் சாம்சன், திருவண்ணாமலை பங்கு தந்தை பீட்டர் ஜூலியன் கூட்டு திருப்பலி செய்தனர். ஆலய பராமரிப்பு குழுவினர், பாடல் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!