கும்பகோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மருத்துவ முகாம்

கும்பகோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மருத்துவ முகாம்
X

மருத்துவ முகாமில் பரிசோதனை நடத்திய மருத்துவர்கள். 

காமராஜர் நற்பணி மன்றம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஹெரிடேஜ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் காமராஜர் நற்பணி மன்றம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஹெரிடேஜ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், காமராஜர் நற்பணி மன்ற தலைவர் சுப்பிரமணியன், மருத்துவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமை, காந்தியடிகள் நற்பணி மன்ற நிறுவனர் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்தார். முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மருத்துவ முகாமில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை, கொரோனா பரிசோதனை, ரத்தக் கொதிப்பு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த முகாமில் 241 பேர் கலந்துகொண்டனர். கண் சிகிச்சை முகாமில் பரிசோதனை செய்ததில் கண் குறைபாடு உள்ள 50க்கும் மேற்பட்டோர்க்கு, ரூ.500 முதல் 800 ரூபாய் வரை, குறைந்த விலையில் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!