முருக்கங்குடி ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

முருக்கங்குடி ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
X

மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. 

கும்பகோணம் அருகே, முருக்கங்குடியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதி, முருக்கங்குடி வருவாய் சரகத்தில், மொத்தம் 20 கிராமங்கள் உள்ளன. இதில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினரால், மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் எம்பி ராமலிங்கம் ஆகியோர், அரசு நிவாரண உதவிகளை வழங்கினர். இதில், முழுவதுமாக சேதமடைந்த 3 வீடுகளுக்கு ரூபாய் 3 5500ம், வீட்டின் பாதிப் பகுதி சேதமடைந்த 20 வீடுகளுக்கு ரூபாய் 4100 என மொத்தம் 23 வீடுகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி, மாவட்ட கவுன்சிலர்கள் ராஜா, சரவணன் ஒன்றிய கவுன்சிலர்கள் மஞ்சுளாதேவி முருகானந்தம், கிறிஸ்டோபர்ராஜ், தண்டந்தோட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், கும்பகோணம் தாசில்தார் தங்க.பிரபாகரன், மண்டல துணை வட்டாட்சியர் பாக்யராஜ், வருவாய் ஆய்வாளர் பிரபு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil