கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையில் முதல் தவணை வழங்கல்
பைல் படம்.
திருப்பனந்தாள் அருகே கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலைக்காக பயிரிடப்பட்ட கரும்புகளை ஆலை நிர்வாகத்தின் ஒப்புதலோடு திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புகளுக்கு நிலுவை தொகையை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைப்பு சார்பில் கடந்த 5 வருடமாக போராடி தற்போது நீதிமன்றம் மூலம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் தீர்வு பெற்றனர்.
இந்த உத்தரவின்படி கலைப்பு அதிகாரி நியமனம் செய்த தீர்ப்பாயம் திவால் விதிகளின்படி பணப்புழக்க விதிமுறைகளுடன் ஒரு சமரசம் ஏற்பாடு திட்டம் பெறப்பட்டது. விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ரூ.78.48 கோடி இருந்தது. கடன் தீர்வுத் திட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் 57 சதவீத தீர்வு தொகையான ரூ 45.01 கோடியை ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனியார் நிறுவனம் ஒரு வருட காலத்திற்குள் நான்கு தவணைகளில் செலுத்தப்பட வேண்டும் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் ராமகிருஷ்ணன் சதாசிவன் கலைப்பு கமிட்டி செயலாளரை பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மோகன சுந்தரம் தலைமையில் நேரில் சந்தித்து முதல் தவணை நிலுவை தொகையை விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் முதல் தவணை நிலுவை தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu