கும்பகோணத்தில் சாதனை புரிந்த ஒன்றாம் வகுப்பு பள்ளி சிறுமிகள்

கும்பகோணத்தில் சாதனை புரிந்த ஒன்றாம் வகுப்பு பள்ளி சிறுமிகள்
X
முத்துபிள்ளைமண்டபத்திலுள்ள அரசுப்பள்ளியில், ரியல் வேல்டு ரெக்கார்டு சார்பில் பள்ளி மாணவிகளின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது

கும்பகோணத்தை அடுத்த முத்துபிள்ளைமண்டபத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ரியல் வேல்டு ரெக்கார்டு சார்பில் பள்ளி மாணவிகளின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். இதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 1-ம் வகுப்பு மாணவிகளான, தமிழினியாள், திருக்குறளிலுள்ள 100 தமிழ் வார்த்தைக்கு 1.20 நிமிடத்தில் அதன் பொருளையும், மிஸ்பாஷெரீன், எண்களை வைத்து, ஆங்கில எழுத்தை கண்டுபிடித்து, 100 வார்த்தைகளை 4.9 நிமிடத்திலும், எகோனா மாற்றப்பட்ட ஆங்கில எழுத்தை வைத்து 100 சரியான வார்த்தையை, 3.44 நிமிடத்திலும், அனன்யா 100 ஆங்கில வார்த்தையை வைத்து, அதுக்குரிய எண்களை 5.47 நிமிடத்திலும், தனுஸ்ஸ்ரீ எண்ணை வைத்து ஆங்கில எழுத்தை கண்டுபிடித்து 100 வார்த்தைகளை 8.40 நிமிடத்தில் கூறினார்கள்.

உலக சாதனை படைத்த 5 அரசு பள்ளி மாணவிகளுக்கும், மாணவிகளை பயிற்சியளித்த பள்ளி வகுப்பு ஆசிரியர் ஆனந்தி ஆகியோருக்கு கும்பகோணம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் ரியல் வேல்டு ரெக்கார்டு நிறுவனத்தலைவர் செந்தில் ஆகியோர் உலக சாதனைக்கான சான்றிதழும், நினைவு பரிசையும் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!