சுவாமிமலையில் குளிர்பானக் கடையில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

சுவாமிமலையில் குளிர்பானக் கடையில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
X

தீவிபத்து ஏற்பட்ட குளிர்பானக்கடை.

சுவாமிமலையில் குளிர்பானக் கடையில் தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை கீழவீதியில் அதியம்ப நல்லூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் விநாயகா கூல்டிரிங்ஸ் என்ற பெயரில் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார்.

இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றுள்ளார். அதன்பிறகு ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக கடைக்குள் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கடையின் உரிமையாளர் கடையை திறந்து பார்ப்பதற்குள் அனைத்து பொருட்களும் தீக்கிரையாயின.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் வரையிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து சுவாமிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!