வேப்பத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் விவரம்
வேப்பத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியலை வேப்பத்தூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் லதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சாந்தகுமார் கோவிந்தராஜ் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர். வேப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:
1-வது வார்டு
பீட்டர் பவுல் ராஜ் (தி.மு.க.) யாகப்பன் (அ.தி.மு.க.), பார்த்திபன் (அ.ம.மு.க.), ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.
2-வது வார்டு
நித்யா தேவி (தி.மு.க.) பவுலின் ஸ்டெல்லா மேரி (அ.தி.மு.க.) ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர்.
3-வது வார்டு
முருகேசன் (தி.மு.க.) ஆரோக்கியசாமி (அ.தி.மு.க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 3 பேர் போட்டியிடுகின்றனர்.
4-வது வார்டு
அஞ்சம்மாள் (தி.மு.க.), விஜயலட்சுமி (அ.தி.மு.க.), மல்லிகா (அ.ம.மு.க.), மற்றும் சுயேட்சை 3 பேர் உட்பட 6 பேர் போட்டியிடுகின்றனர்.
5-வது வார்டு
சத்யராஜ் (தி.மு.க.) முருகானந்தம் (அ.தி.மு.க.) மாலதி (பி.ஜே.பி), பாக்யராஜ் (நாம் தமிழர்.) மற்றும் சுயேட்சை 3 பேர் உட்பட 7 பேர் போட்டியிடுகின்றனர்.
6-வது வார்டு
இந்திரா (தி.மு.க.), ராஜராஜேஸ்வரி (அ.தி.மு.க.) இந்திராகாந்தி (அ.ம. மு.க) சண்முகவள்ளி (தே.மு.தி.க) மற்றும் சுயேட்சை 2 பேர் உட்பட 6 பேர் போட்டியிடுகின்றனர்.
7-வது வார்டு
வரதராஜன் (தி.மு.க.), மகாலிங்கம் (அ.தி.மு.க.), சந்திரசேகரன் (பி.ஜே.பி.) ராஜாஜி (அ.ம.மு.க..), ஆகிய 4 .பேர் போட்டியிடுகின்றனர்.
8-வது வார்டு
மகேஸ்வரி (தி.மு.க.), கலா (அ.தி.மு.க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 3 பேர் போட்டியிடுகின்றனர்.
9-வது வார்டு
சுதா ராமச்சந்திரன் (தி.மு.க.), வள்ளி (அ.தி.மு.க.), ராஜலட்சுமி (அ.ம.மு.க.) ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.
10-வது வார்டு
வெள்ளைச்சாமி (தி.மு.க.), கோவிந்தராஜன் (அ.தி.மு.க.), அன்புகனி (பி.ஜே.பி.) மற்றும் சுயேச்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.
11-வது வார்டு
ருக்குமணி (தி.மு.க.), மோகனா(அ.தி.மு.க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 3 பேர் போட்டியிடுகின்றனர்.
12-வது வார்டு
ராஜா (தி.மு.க.) பிரேம்நாத் (அ.தி.மு.க.), ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர்.
13-வது வார்டு
ராமகிருஷ்ணன்(காங்.) கணேசன் (அ.தி.மு.க.), ரத்தினம் (அ.ம.மு.க.) மற்றும் சுயேட்சை 5 பேர் உட்பட 8 பேர் போட்டியிடுகின்றனர்.
14-வது வார்டு
ஜெயலட்சுமி (தி.மு.க.), கங்காபார்வதி (அ.தி.மு.க.), செல்வி (பா.ம.க.) விஜயராணி (அ.ம. மு.க.) மற்றும் பேச்சை ஒருவர் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்.
15-வது வார்டு
லதா (தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.), வாசுகி (அ.ம.மு.க.) மற்றும் சுயேட்சை 2பேர் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 15 வார்டுகளிலும் 64 பேர் போட்டியிடுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu