வெளிநாட்டிலிருந்து கும்பகோணம் வந்த இளைஞருக்கு காய்ச்சல் : தனி வார்டில் அனுமதி

வெளிநாட்டிலிருந்து கும்பகோணம் வந்த இளைஞருக்கு காய்ச்சல் :  தனி வார்டில் அனுமதி
X
ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும்

கும்பகோணம் அருகே திருமங்கலகுடி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் சார்ஜாவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 19-ம் தேதி அவர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்ததால் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு அவரது ரத்த, சளி மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வர நான்கு முதல் ஏழு நாட்கள் வரை ஆகும். இந்நிலையில் அந்த இளைஞருக்கு நேற்று காலை காய்ச்சல் ஏற்பட்டதால், முழு பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார் கூறுகையில், அந்த இளைஞருக்கு காய்ச்சல் உள்ளதால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் ஒமைக்ரான் பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!