நாகேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா

நாகேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா
X
கும்பகோணம் நாகேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு தெப்பதிருவிழா நடைபெற்றது .

மகாமக திருவிழா தொடர்புடைய 12 சிவன் கோவில்களில் ஒன்றாகவும், நாகதோஷ பரிகார தலமாகவும் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் திகழ்கிறது. மகாபிரளய காலத்தில் அமிர்தகுடம் உடைந்து சிதறியபோது இத்தலத்தில் வில்வம் சிதறி விழுந்ததால் இங்கு இறைவன் வில்வனேசராக எழுந்தருளினார்.

உலக பாரத்தை தாங்க சக்தியற்ற நாகராஜன், வில்வனேசரை பூஜை செய்து அருள்பெற்றதால் நாகராஜன் வேண்டுகோளுக்கிணங்க நாகேஸ்வரர் என்ற பெயருடன் இக்கோவில் விளங்குவதுடன், நாகதோஷ பரிகார தலமாகவும் போற்றப்படுகிறது.

இந்நிலையில் நாகேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் கும்பகோணம் மகாமக குளத்தில் இரவு நடைபெற்றது. இதில் நாகேஸ்வரர் கோவில் உற்சவரான பிரகன் நாயகி சமேத நாகேஸ்வரர்சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தெப்ப உற்சவத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் கூடினர். விழாவையொட்டி நாகேஸ்வரர் சுவாமி கோவில் கோபுரம் மின் அலங்காரத்தில் ஜொலித்தது.

Tags

Next Story