தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் உற்பத்தி சரிவு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் உற்பத்தி சரிவு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை
X

கரும்பு விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெல்லம் காய்ச்சும் பணி மிகவும் மந்தமாக இருக்கிறது. இதற்கு காரணம் கட்டுபடியான விலை இல்லை மற்றும் ஆள் பற்றாக்குறை நிலை வருகிறது.

இந்த வருடம் அரசு அதிக அளவில் நியாயவிலைக் கடைகளில் வெல்லம் கொடுப்பதற்காக கொள்முதல் செய்யப்படும் என்று விவசாயிகள் உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் விவசாயிகள் ஏமாந்து விட்டார்கள் அரசு வேறு மாநிலத்திலிருந்து தேவையான வெல்லம் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக பொங்கலுக்கு கூட இங்கே விலை ஏறவில்லை மிகவும் குறைவாக இருக்கிறது. அதேபோல் வெளி மாவட்டங்களிலிருந்து வெல்லம் காய்ச்ச வந்திருக்கும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் வெல்லம் காய்ச்சுவதற்காக பயிர்செய்யப்பட்ட கரும்பை தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வெட்டி அனுப்பக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இதன் காரணமாக குடிசைத் தொழில் போல இயங்கி வந்த வெல்லம் உற்பத்தி தொழிற்சாலைகள் விவசாயிகளும் தொழிலாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கடந்த 4 ஆண்டுகளாக இயங்காமல் பழுதடைந்து நலிவடைந்து இருக்கிறது.

அதற்கு அரசும் தனியார் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமண்டங்குடி சர்கரை ஆலை இயங்கினால் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள கரும்புகள் அனைத்தும் அந்த சர்க்கரை ஆலைக்கு அனுப்ப ஏதுவாக இருக்கும்.

தற்போது 50 கிலோ மீட்டர் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் தேடி விவசாயிகள் கரும்புகளை வெட்டி அனுப்பக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!