சுவாமி மலை அருகே நடந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சுவாமி மலை அருகே நடந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
X
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலை அருகே நடந்த சாலை விபத்தில் விவசாயி தலைநசுங்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே இன்னம்பூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் விவசாயி தங்கையன் (70). இவருடைய நண்பர் சுவாமிநாதன் என்பவர் டூவீலரில் இன்னம்பூர் கடைவீதியில் வீட்டிற்கு வேண்டிய சாமான்களை வாங்கிக்கொண்டு டூவீலரில் வந்தார்.

இந்த சமயத்தில் திருப்புறம்பியத்தில் இருந்து கும்பகோணத்தை நோக்கி அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் சறுக்கி விழுந்த சுவாமிநாதன் இடது புறமாகவும், தங்கையன் வலது புறமாகவும் விழுந்தனர். இதில் பஸ்சின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே விவசாயி தங்கையன் இறந்தார். சுவாமிமலை காவல் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் காந்திநகர் பகுதி சோகத்தில் மூழ்கியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!