முகநூலில் ஏற்பட்ட பழக்கம்: பல லட்சங்களை இழந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்

முகநூலில் ஏற்பட்ட பழக்கம்: பல லட்சங்களை இழந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்
X

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் மனைவி ஜனனி.

முகநூலில் ஏற்பட்ட பழக்கத்தால் பல லட்சம் ரூபாயை இழந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மற்றும் ஏமாற்றி பெண் மீது வழக்கு பதிவு.

திருவாரூர் மாவட்டம் கண்டியூர் சேர்ந்தவர் சரவணபார்த்திபன் (51). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சரவணன் பார்த்திபனுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் மனைவி ஜனனி (25), என்பவருக்கும் முகநூல் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பழக்கத்தின் பெயரில் பல லட்ச ரூபாயை சரவண பார்த்திபனிடம் இருந்து ஜனனி பெற்றுக்கொண்டுள்ளார். இதே போல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜனனி, தனது குரலை மாற்றி, ஜனனி தோழி பேசுவதாக குரலை மாற்றி பேசி உள்ளார். ஜனனி, சரவண பார்த்திபனிடம், தோழியின் வீட்டில் நீங்கள் பேசுவது தெரிந்து விட்டது எனக் கூறி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். பணத்தைக் கொடுத்தால் சமாதானம் செய்து விடலாம் என தெரிவித்தார்.

இதற்கிடையில் ஜனனி,பெண் போலீஸ் போல் பேசி, மிரட்டி, இன்ஸ்பெக்டர் அனுப்பி வைக்கிறேன் பணத்தை கொடுத்து அனுப்பவும் என கூறியுள்ளார். ஜனனி, தனது கணவர் பார்த்திபனை இன்ஸ்பெக்டராக நடிக்கச் சொல்லி, நேற்று திருவாரூர் மாவட்டம், கண்டியூருக்கு அனுப்பி வைத்து, சரவணபார்த்திபன் இருந்து ரூ.65,000 பணத்தை பெற்றுள்ளார்.

ஆனால், ஜனனியின் கணவர் பார்த்திபன், மேலும் பணம் வேண்டும் என கூறியதால், சரவண பாண்டியன் ஜனனியின் கணவர் பார்த்திபனை கும்பகோணம் லாட்ஜில் தங்க வைத்தார். இதனால் சந்தேகம் அடைந்த சரவண பார்த்திபன், தனது நண்பர்களான வழக்கறிஞர் மனோகர் வீரா, குருசாமி, நடராஜன் ஆகியோரை அழைத்துச் சென்று மிரட்டி உள்ளார்.

பின்னர், பார்த்திபன் தான் ஜனனியின் கணவர் என்று ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, சரவண பார்த்திபன், ஜனனிக்கு போன் செய்து, நான் கொடுத்த பல லட்சங்களை திருப்பி கொடுத்துவிட்டு, உன் கணவரை மீட்டு செல் என கூறியதால் ஜனனி, கும்பகோணத்திற்கு வந்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தரப்பினரையும் விசாரித்த போலீசார், ஜனனி, ஜனனி கணவர் பார்த்திபன், கண்டியூர் சேர்ந்த சரவண பார்த்திபன், தஞ்சையை சேர்ந்த நடராஜன், குடவாசலில் சேர்ந்த குருசாமி ஆகிய ஐந்து பேரையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!