கும்பகோணத்தில் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம்
குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் சோழா மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் சோழா மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் ரமேஷ்ராஜா முன்னிலை வகித்தார். செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சென்னை முதல் குமரி வரை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அரசின் முன்களப் பணி துறையினருக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் துணைச் செயலாளர்கள் அண்ணாதுரை, வேதம் முரளி, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கியாசுதீன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu