கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்க ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்க ஆலோசனைக் கூட்டம்
X

கும்பகோணத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் மௌன அஞ்சலி

கும்பகோணத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் மௌன அஞ்சலி

கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் ராணுவ நல சங்கம் தலைவர் மேஜர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களின் மறைவிற்கு முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, வருகிற 2-ந்தேதி 13வது ஆண்டு விழா நடைபெறுகிறது. அதில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளார்கள். ஆண்டு விழாவில் அனைத்து முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொள்ள வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட ராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரங்கநாதன், உபதலைவர் மணி, இணைசெயலாளர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!