மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலில் 750 வாக்குச்சாவடி மையம் அமைப்பு

மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலில் 750 வாக்குச்சாவடி மையம்  அமைப்பு
X

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம்

தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் 459 கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 459 கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 750 வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது. இதில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 740 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் 459 கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 506 வாக்காளர்கள் 196 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் 48 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 627 வாக்காளர்கள் 139 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்கஉள்ளனர்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 27 ஆயிரத்து 245 வாக்காளர்கள் 33 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 66 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 62 ஆயிரத்து 477 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஆடுதுறை பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.அம்மாப்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 11 ஆயிரத்து 831 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

அய்யம்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 20 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 14 ஆயிரத்து 588 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.சோழபுரம் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 5 ஆயிரத்து 906 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மதுக்கூர் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 18 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 14 ஆயிரத்து 48 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 ஆயிரத்து 17 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மெலட்டூர் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 15 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 7 ஆயிரத்து 134 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.ஒரத்தநாடு பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 ஆயிரத்து 239 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 16 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 14 ஆயிரத்து 403 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.பேராவூரணி பேரூராட்சியில் 18 கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 23 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 18 ஆயிரத்து 714 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பெருமகளூர் பேரூராட்சியில் 12 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 12 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 4 ஆயிரத்து 561 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.சுவாமிமலை பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 6 ஆயிரத்து 399 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 ஆயிரத்து 685 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 13 ஆயிரத்து 579 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

திருப்பனந்தாள் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 8 ஆயிரத்து 825 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.திருப்புவனம் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 13 ஆயிரத்து 351 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

திருவையாறு பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 13 ஆயிரத்து 70 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.திருவிடைமருதூர் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 15 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 12 ஆயிரத்து 400 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

வல்லம் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 17 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 13 ஆயிரத்து 324 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.வேப்பத்தூர் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 15 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 6 ஆயிரத்து 520 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

750 வாக்குச்சாவடி மையம்:

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 459 கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 750 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 6 லட்சத்து 33 ஆயிரத்து 740 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!