கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
X

பைல் படம்

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ அன்பழகன் வழங்கினார்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக, சமத்துவ பொங்கல் விழா கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.



விழாவில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து புடவை, வேஷ்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், தமிழக அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன்,

கும்பகோணம் மாநகர திமுக செயலாளர் தமிழழகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அசோக்குமார், பாஸ்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெட்சிணாமூர்த்தி, மாநகர கழக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!