கும்பகோணம் அருகே அண்டக்குடியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கும்பகோணம் அருகே அண்டக்குடியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
X
கும்பகோணம் அருகே அண்டக்குடியில் மின்சாரம் பாய்ந்து வெல்டிங் தொழிலாளி பலி பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதி அண்டக்குடி மெயின்ரோட்டில் வசிப்பவர் நடேசன் மகன் முருகானந்தம் (40). இவர் கபிஸ்தலத்தில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வி (35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் முருகானந்தம் நேற்று மாலை வெல்டிங் பட்டறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அருகிலுள்ள ஸ்விட்ச் பாக்ஸ் பயன்படுத்தியபோது ஷாக் அடித்ததால் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரது அண்ணன் அழகருக்கு (44) கொடுத்த தகவலின் பேரில் மயங்கியிருந்த முருகானந்தத்தை பாபநாசம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் வரும் வழியிலேயே முருகானந்தம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

Tags

Next Story
Will AI Replace Web Developers