கும்பகோணம் திமுக வேட்பாளர் அறிமுகம்
கும்பகோணம் தொகுதி தி.கு.க வேட்பாளராக அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரைப்பற்றி...
சாக்கோட்டை க.அன்பழகன்
கணபதி – ஏகாம்பாள் தம்பதிகளின் மகன். பிறந்த ஆண்டு, தேதி : 24.12.1949 .
ஆரம்பக் கல்வியை சாக்கோட்டை பெரியார் பகுத்தறிவு பாடசாலையிலும், உயர் நிலைக் கல்வியை குடந்தை சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
மாணவப் பருவத்திலேயே திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.
11.03.1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இவரது மனைவியின் பெயர் இன்னமுது.
1974 இல் சாக்கோட்டை கிளைக் கழக செயலாளராக கட்சிப் பணியை தொடங்கினார்.
1986 இல் பொதுக்குழு உறுப்பினர்
1996 இல் குடந்தை ஒன்றிய கழக செயலாளர்
1996-2001 மற்றும் 2001-2006 ஆகிய ஆண்டுகளில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்
2006-2011 இல் தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்
2006-2011 இல் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிட்., தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
கும்பகோணம் பால் கூட்டுறவு சங்கம் மற்றும் மருதாநல்லூர் கிராம கூட்டுறவு சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் சந்திரசேகரபுரம் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராக பொறுப்பு வகித்துள்ளார்.
1989 குடந்தை நகர வீடுகட்டும் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று, மாநிலத்திலேயே சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கூட்டுறவு துறை அமைச்சர் K.N.நேரு தலைமையில், 24.01.2001 அன்று மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
ஏழை எளியவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், குடந்தை நகரில் 2004 இல் அன்பு மருத்துவமனையை துவங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.
சாக்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் நினைவிடத்தில் நூலகம், தையல் பயிற்சிப் பள்ளி மற்றும் கணிணி பயிற்சி மையம் தொடங்கி ஏழை எளிய மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை வழங்கி வருகிறார்.
2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, இரண்டு முறை கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu