ஆடுதுறை அருகே சாலை விரிவாக்க பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் சாவு
முதியவர் இறந்த பள்ளத்தில் மீட்பு பணி நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மயிலாடுதுறை மெயின் ரோட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆடுதுறை பெட்ரோல் பங்க் அருகில் சாலை விரிவாக்க பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இதில் சமீபத்தில் பெய்த மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 60 )என்பவர் கூலி வேலை செய்து வந்த இவர் நேற்று இரவு பள்ளத்தில் தவறி விழுந்து தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம. க. ஸ்டாலின் உயிரிழந்த செல்வராஜின் உடலை வெளியில் எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பும் வரை உடன் இருந்தார்.
பின்னர் பாதிக்கப்பட்ட செல்வராஜ் குடும்பத்திற்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 5000 வழங்கி ஆறுதல் கூறினார். சாலை விரிவாக்க பள்ளத்தில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu