சுவாமிமலையில் இல்லந்தோறும் கல்வி திட்டம் துவக்கம்

சுவாமிமலையில் உள்ள, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இல்லந்தோறும் கல்வி நிகழ்ச்சி தொடக்கவிழா நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், சுவாமிமலையில் உள்ள, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இல்லந்தோறும் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாண்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளருமான கமலம் முன்னிலை வகித்தார். இல்லந்தோறும் கல்வி என்ற நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் சிவதாஸ் மற்றும் சுப்பிரமணியன், செந்தில், வீரமணி, சங்கர், பிரதீப், பாஸ்கர், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu