கும்பகோணம் ஒன்றியக்குழு 24வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வெற்றி

கும்பகோணம் ஒன்றியக்குழு 24வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வெற்றி
X

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சசிக்குமார்.

24வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் சசிக்குமார் 189 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கும்பகோணம் ஒன்றியக்குழு 24வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் சசிக்குமார் 1,853 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சீத்தாராமன் ஆயிரத்து 664 வாக்குகளும், அமமுக வேட்பாளர் விஜய்ஆனந்த் 757 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து திமுக வேட்பாளர் 189 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வார்டில் அதிமுக வேட்பாளர் சீத்தாராமன் தொடக்கத்தில் முன்னணியில் இருந்தார். அமமுக வேட்பாளர் விஜய்ஆனந்த் கணிசமான ஓட்டுகளை பிரித்ததால் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதிமுகவின் வெற்றியை அமமுக தடுத்துள்ளது.

திருவிடைமருதுார் ஒன்றியம் விளங்குடி ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவாளர் வேணுகோபால் 363 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஊராட்சி வார்டுகள் : கும்பகோணம் ஒன்றியத்தில் கடிச்சம்பாடி ஊராட்சி 6வது வார்டில் மனோகரன், சுந்தரபெருமாள் கோயில் ஊராட்சி 12வது வார்டில் புண்ணியமூர்த்தி, திருவிடைமருதுார் ஒன்றியத்தில் இஞ்சிக்கொல்லை ஊராட்சி 1வது வார்டில் லதா, திருநீலக்குடி ஊராட்சி 4வது வார்டில் முருகேசன், வண்டுவாஞ்சேரி ஊராட்சி 3வது வார்டில் பார்வதி, வண்ணக்குடி ஊராட்சி 5வது வார்டில் மாரிமுத்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்