சுவாமிமலையில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

சுவாமிமலையில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
X

சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். 

கும்பகோணம் அருகே, சுவாமிமலையில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் விஜயகுமார், நிர்வாகிகள் முகமது இக்பால், நெடுஞ்செழியன், பி.கே.கோபால், ஜெமினி, டிஜிஎஸ் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சம்பத், மனோகரன், ஆறுமதி, மதியழகன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சங்கர், கோபி மற்றும் திமுகவினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai automation in agriculture