கும்பகோணத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்

கும்பகோணத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

கும்பகோணத்தில் நடைபெற்ற திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்.

கும்பகோணத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடந்தை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசானை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பரிந்துரை செய்த கும்பகோணம் எம்.எல்.ஏ., சாக்கோட்டை அன்பழகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வது.

பேரறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய பகுதிகளில் அனைத்து ஊராட்சிகளிலும், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடியேற்ற வேண்டும். சுவாமிமலை பேரூராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி மன்ற உறுப்பினர்கான இடைத்தேர்தல் எப்பொழுது அறிவித்தாலும் கழகம் சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வருகின்ற 20ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் அவரவர் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டத்தை தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil