கும்பகோணம் அருகே நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடியை மாவட்ட கலெக்டர் ஆய்வு

கும்பகோணம் அருகே நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடியை மாவட்ட கலெக்டர் ஆய்வு
X

உளுந்து பயிர் சாகுபடி வயலை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார் 

கும்பகோணம் அருகே நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடியை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

கும்பகோணம் அருகே உள்ள பழவந்தான் கட்டளை கிராமத்தில் நஞ்சை தரிசு நிலத்தில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டிருப்பதை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயிகளிடம் கோடை காலத்தில் கோடை பயிர்களான உளுந்து, எள் போன்ற கோடை பயிர்கள் செய்வதைப்பற்றி கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது தஞ்சை வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கும்பகோணம் வேளாண்மை அலுவலர் தேவி கலாவதி, துணை வேளாண்மை அலுவலர் சாரதி, கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர் உள்பட வேளாண்மைத் துறையினர், வருவாய் துறையினர் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story