பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் சன்னதியை திறக்க வலியுறுத்தி பக்தர்கள் சாலை மறியல்

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் சன்னதியை திறக்க வலியுறுத்தி பக்தர்கள் சாலை மறியல்
X

பட்டீஸ்வரம் அருள்மிகு துர்க்கை அம்மன் சன்னதி கதவை திறக்க கோரி வணிகர்களும் பக்தர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் சன்னதி கதவை திறக்க கோரி வணிகர்களும் பக்தர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

பட்டீஸ்வரம் அருள்மிகு துர்க்கை அம்மன் சன்னதி கதவை திறக்க கோரி வணிகர்களும் பக்தர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற துர்கையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பல மாதங்களுக்கு பிறகு வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என நேற்று அனுமதி வழங்கியது. இதனையடுத்து பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு பகுதி வாயில் மட்டுமே திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வடக்கு பகுதியில் அமைந்துள்ள துர்க்கையம்மன் சன்னதியின் கதவுகள் திறக்கப்படவில்லை இதுகுறித்து அப்பகுதி வணிகர்கள் கோவில் வடக்கு வாசல் திறக்கக் கோரி கோவில் நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர்.

கோவில் நிர்வாக அலுவலர் வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் கோவில் திறக்க இதுவரை அனுமதி வரவில்லை என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பூஜை பொருட்களை விற்கும் வணிகர்கள் ஆலய கதவை திறக்க கோரி பக்தர்கள் மற்றும் வணிகர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் கோவில் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தேன் பேரில் பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.

Tags

Next Story