முறைகேடுகள் குறித்து விவாதிக்க ஊராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி மறுப்பு

முறைகேடுகள் குறித்து விவாதிக்க ஊராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி மறுப்பு
X

பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுகவினர்.  

பட்டீஸ்வரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து விசாரணை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு.

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் வெற்றிச்செல்வி ரகு தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பட்டீஸ்வரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குளங்கள், மகசூல் உள்ளிட்டவற்றை ஏலம் விடுவதற்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து பட்டீஸ்வரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தரைகடை, குளங்கள் உள்ளிட்டவை ஏலம் விடுவது தொடர்பாக நடைபெறும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு குறித்து கூட்டத்தில் விவாதிக்க திமுகவினர் வலியுறுத்தினார். இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அனுமதி மறுத்ததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!