/* */

கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு மாற்றுத் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ரயில் பயண சலுகை பறிப்பை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு  மாற்றுத் மாற்றுத்திறனாளிகள்  ஆர்ப்பாட்டம்
X

ரயில் பயண சலுகை பறிப்பை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், திருபுவனம் கிளை செயலாளர் சேகர், சுபாஷ், வேப்பத்தூர், ராஜேந்திரன், நந்தகுமார், பிரபாகரன், திருப்பனந்தாள் ஏ. எஸ். பாரதி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளை மூடி வைக்காமல் மீண்டும் திறந்து விடு, ரயில்வே பார்சை கும்பகோணத்தில் முகாமிட்டு உடனே வழங்கிடு, பிளாட்பார்ம் கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 50 ஆக உயர்த்துவதை உடனே கைவிட வேண்டும், மின்தூக்கி நகரும் படிக்கட்டுகளை ரயில் நிலையங்களில் மீண்டும் இயக்கிட வேண்டும் , பாண்டிச்சேரி, சண்டிகர், யூனியன் பிரதேசங்களில் மாற்றுத்திறனாளிகள் வாகனத்திற்கு பெட்ரோல் மானியம் வழங்குவதை போன்று தமிழகத்திலும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Updated On: 11 Aug 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!