சுவாமிமலையில் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளின் சங்கமம்

சுவாமிமலையில் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளின் சங்கமம்
X

சுவாமிமலையில் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளின் சங்கமம் நிகழ்வில் பங்கேற்றவர்கள்.  

சுவாமிமலையில், பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணம் அருகே, சுவாமிமலையில் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளின் சங்கமம், சிலைமலை கலைச்சூரியன் அறக்கட்டளை ஸ்ரீ வஜ்ரவேல் நாட்டியாலயா மற்றும் சோழர் கலை மன்றம் ஆகியன இணைந்து நடத்திய, புத்தாண்டு, பொங்கல், குடியரசு தின முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுவாமிமலை முன்னாள் லயன் தலைவர் கேசவராஜன், சுவாமிமலை திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், அழகப்பா கேஸ் மாணிக்கம், சோழர் கலைமன்றம் தலைவர் ரவிச்சந்தர், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!