கும்பகோணம் பாலத்தில் அன்னநடை போட்ட முதலை : அச்சமடைந்த பொதுமக்கள்
கும்பகோணத்தில் பாலத்தில் சிக்கிய முதலை
தஞ்சாவூர் மாவட்டம் அணைகரையில் கும்பகோணம் - சென்னை சாலையில் 185 ஆண்டுகள் பழமையான கொள்ளிடம் பாலம் உள்ளது. இரண்டு ஆறுகளுக்குள் அணைக்கரை கிராமம் இருப்பதால், தீவுபோல் காட்சியளிக்கும். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் 50 க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கிறது,
கொள்ளிடம் அணைக்கரையில் வசித்து வரும் முதலைகள், ஆண்டு தோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி பாசன வாய்க்கால்கள் வழியாக இளநாங்கூர், சிவாயம், செட்டிமேடு, நாஞ்சலுார், பழைய கொள்ளிடம், வடக்கு ராஜன் பாசன வாய்க்கால், மேலப்பருத்திக்குடி, பெராம்பட்டு, கூத்தன் கோவில், வேளக்குடி, அகரநல்லுார், வல்லம்படுகை, கடவாச்சேரி, ஜெயங்கொண்டபட்டினம், பிச்சாவரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராமங்களில் புகுந்துவிடும்.
மேலும் ஆற்றில் இறங்கும் பொது மக்கள், கால்நடைகளை கடித்து இழுத்துச் செல்கின்றன. தொடர்ந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பும் அதிகம் உள்ளது. ஆற்றில் வெள்ள பாதிப்பு ஏற்படும் போதும், ஆற்றிலிருந்து முதலைகள் வெளியேறி ஊருக்குள் வந்துவிடும். இந்நிலையில் அணைக்கரை பாலத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் வழியில் முதலை கிடப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயனைப்புதுறையினருக்கு தகவளித்த பொதுமக்கள் முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu