கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கும்பகோணம் பேட்டை சாலைக்கார தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் கிளை செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாரதி, மாநகர செயலாளர் மதியழகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், கும்பகோணம் பேட்டை தெருவில் உள்ள தஞ்சாவூர் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், பொதுமக்கள் தினமும் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். பேட்டை தெருவில் பின்புறமுள்ள சுகாதார சந்தில் பல மாதங்களாக குளம் போல் தேங்கி உள்ள சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu